1. ஸ்ரீ கடுவெளிச் சித்தர் பாடல் - ஸ்துதி.

  === 

  நீர் மேற் குமிழியிக் காயம் இது 

  நில்லாது போய்விடும் நீயறி மாயம் 

  பார்மீதில் மெத்தவும் நேயம் சற்றும்

  பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.

  --

  இந்த உலகில் நம் வாழ்க்கை, நீரின் மேல் ஏற்படும் குமிழி போன்றது.  இது உலகின் மாயைத் தன்மை. 

  உந்த உலகில் அதிகம் ஆசை கொள்ளாதிருக்க ஓர் உபாயம் செய்ய வேண்டும்.

  ===

  Sri Kaduveli Siddhar Paadal-Song-Sthuthi.

  ===

  Neer Maer Kumizhiyik Kaayam Idhu 

  Nillaadhu Po(h)ividum Neeyari Maayam

  Paarmeedhil Meththavum Naeyam Sattrum

  Pattraa Dhirundhidap Pannu Mubaayam.

  1

  View comments

 2. சபரிமலை அய்யப்பசாமி, சாஸ்தா, மணிகண்டன், வில்லாளிவீரன் பாடல் - ஸ்துதி.

  ===  

  பக்திதான் பரவசம்தான் புனிதருள் தேனாகும் 

  பந்தளனின் புகழ்பாடும் சரிதம் பேரழகாகும் 

  தித்திக்கும் வானமுதம் புனிதத் தேன்சுனையாகும் 

  தன்னருளில் மலர்ந்திருக்கும் புனித அருள் மலராகும் 

  சுனையில் வந்து பாடுவதும் சபரிமலை குயிலாகும் 

  புவியில் வந்து ஆளுவதும் பந்தளனின் கொடியாகும் 

  பாசமறையச் சூடுவதும் பம்பை தேவபதமாகும் 

  அன்பன் நெஞ்சில் கூடுவதும் சபரி என்ற எழிலாகும் 

  சபரி என்ற எழிலாகும் ..... சாமியே சரணம் ஐயப்பா. 

  ===

  Sabarimalai Ayyappasaami, Saasthaa, Manigandan, Villaaliveeran Paadal-Song-Sthuthi.

  ===

  Bhakthidhaan Paravasamdhaan Punidharul Thaenaagum

  Pandhalanin Pugazhpaadum Charitham Paerazhagaagum

  Thiththikkum Vaanamudham Punidhath
  Thaensunaiyaagum

  Thannarulil Malarndhdhirukkum Punidha Arul Malaraagum

  Sunaiyil Vandhu Paaduvadhum Sabarimalai Kuyilaagum

  Puviyil Vandhu Aaluvadhum Pandhalanin Kodiyaagum

  Paasamaraiyach Sooduvadhum Pambai Dhaevapadhamaagum

  Anban Nenjil Kooduvadhum Sabari Yendra Yezhilaagum

  Sabari Yendra Yezhilaagum ..... Saamiyae Saranam Ayyappaa.

  1

  View comments

 3. வெற்றிவேலன், திருமுருகன், கந்தன், சாமிநாதன்  சுப்பிரமணியன், குகன் பாடல் - ஸ்துதி. 

  ===

  ஆயிரம் பாட்டெழுதி அத்தனைக்கும் பொருள் எழுதி 

  பாயிரமும் எழுதி வந்தேன் - முருகா 

  உன்னைப் பார்த்துவிட்டேன் பாட்டெதற்கு . (ஆ).

  கோடி பணம் திரட்டி கொட்டிவைக்க வீடுகட்டி 

  பாடுபட்டு குலைந்தேன் நான் முருகா

   உன்னை பார்த்துவிட்டேன் பாட்டெதற்கு. (ஆ).

  வேதங்களை நான் அறிந்தேன் விளக்கம் கேட்டறிந்தேன்

  பாதைகளின் முடிவே ஓம் முருகா

  உன்னை பார்த்துவிட்டேன் நூல் எதற்கு. (ஆ).

  === 

  Vetrivelan, Velmurugan, Kandhan, Guhan, Subramaniyan, Swaminadhan Sthuthi-Song-Paadal.

  ===

  Aayiram Paattezhudhi Aththanaikkum Porul Yezhudhi

  Paayiramum Yezhudhi Vandhdhaen - Murugaa

  Unnaip Paarththuvittaen Paattedharku. (Aa).

  Kohdi Panam Thiratti Kottivaikka Veedukatti

  Paadupattu Kulaindhdhaen Naan Murugaa

  Unnai Paarththuvittaen Paattedharku. (Aa).

  Vaedhangalai Naan Arindhdhaen Vilakkam Kaettarindhdhaen

  Paadhaigalin Mudivae Om Murugaa

  Unnai Paarththuvittaen Nool Yedharku. (Aa).

  1

  View comments

 4. அருள்மிகு நடராஜப் பெருமான், நடராசன் ஸ்லோகம், ஸ்துதி.

  === 

  ஆதியாய் நடுவும் ஆகி, அளவிலா அளவும் ஆகி 

  சோதியாய் உணர்வும் ஆகி, தோன்றிய பொருளும் ஆகி 

  பேதியா ஏகம் ஆகி. பெண்ணுமாய் ஆணும் ஆகி 

  போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி! போற்றி !

  கற்பனை கடந்த ஜோதி கருணையே உருவமாகி 

  அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் 

  சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று 

  பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி! போற்றி!

  === 

  Lord Natrajan, Natarajar Paadal-Song-Sthuthi.

  ===

  Aadhiyaai Naduvum Aagi, Alavilaa Alavum Aagi

  Johdhiyaai Unarvum Aagi, Thohndriya Porulum Aagi

  Paedhiyaa Yaegam Aagi, Pennumaai Aanum Aagi

  Phohdhiyaa Nirkum Thillaip Podhunadam Potri! Potri!

  Karpanai Kadandhdha Johdhi Karunaiyae Uruvamaagi

  Arpudhak Kohla Needi Arumaraich Siraththin Maelaam

  Sirpara Vyohma Maagum Thiruchchittram Balaththul Nindru

  Porpudan Nadam Seigindra Poongkazhal Potri! Potri!

  1

  View comments

 5. அருள்மிகு கணபதி, கணேசன், கஜானனன், பிள்ளையார், விக்னேஸ்வரன ஸ்துதி - பாடல்.

  === 

  காலது கையது கண்ணது தீயது கார்மதநீர் 

  மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம் 

  பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண் 

  வேலது வாளது நான்மறைக் கீன்ற விடுசுடர்க்கே.

  - கட்டளைக் கலித்துறை.

  ===    

  Lord Ganapathi, Ganesan, Vigneswaran, Gajaananan Sthuthi - Prayer Song.

  ===

  Kaaladhu Kaiyadhu Kannadhu Theeyadhu Kaarmadhaneer

  Maeladhu Keezhadhu Nooladhu Verpadhu Porpamaitheem

  Paaladhu Thaenadhu Thaanadhu Menmozhip Paavaimuppoon

  Vaeladhu Vaaladhu Naanmaraik Keendra Vidusudarkkae.

  - Kattalaik Kalithurai.

  1

  View comments


 6. அருள்மிகு ஆஞ்சநேயர், அனுமன் ஸ்துதி.

  ===  

  அறவழி காட்டுவோனே ஆஞ்சநேயா ஆத்மஞானம் அருள்வாய் ஹனுமந்தா 

  அழிவற்றவனே ஆஞ்சநேயா ஆன்மீகச் சித்தனே  ஹனுமந்தா 

  உள்ளம்கவர் கள்வனே ஆஞ்சநேயா உயிர்களைக் காப்பாய் ஹனுமந்தா 

  உறுதிப்பொருளே ஆஞ்சநேயா உறுதிச்சொல்லே ஹனுமந்தா 

  இச்சையெல்லாம் உன் மேலே ஆஞ்சநேயா இனியொரு பிறவி வேண்டாம் ஹனுமந்தா  

  விரதங்கள் துணையே ஆஞ்சநேயா வினைகள் தீய்ப்பாய் ஹனுமந்தா 

  விண்ணே மண்ணே ஆஞ்சநேயா  கண்ணின் மணியே ஹனுமந்தா 

  திருவருட் செல்வனே ஆஞ்சநேயா திருவருள் புரிவாயே ஹனுமந்தா 

  அற்புதத் தேனே ஆஞ்சநேயா ஆனந்தத் தேனே ஹனுமந்தா 

  கோள்களின் கோலாட்டமே ஆஞ்சநேயா கோள்களின் வினை தீய்ப்பாய் ஹனுமந்தா 

  கண்களை மூடி காண்கின்றேன் ஆஞ்சநேயா அகக்கண் திறக்க அருள்வாயே ஹனுமந்தா 

  தேடியே உன்னை நாடி வந்தோம் ஆஞ்சநேயா ஓடியே வந்து அருள்வாயே ஹனுமந்தா 

  கொஞ்சியே நீ வருவாய் ஆஞ்சநேயா கும்பிட அருள் தருவாய் ஹனுமந்தா 

  அடியார்க்கடியானே ஆஞ்சநேயா அடியிணை என்றும் ஏத்தி  தொழுவோம் ஹனுமந்தா. 

  === 

  Sri Anjaneyar, Anuman Sthuthi.

  === 

  Aravazhi Kaattuvohnae Aanjanaeyaa Aathmagnaanam Arulvaai Hanumanthaa

  Azhivattravanae Aanjanaeyaa Aanmeegach Sidhdhanae Hanumanthaa

  Ullamkavar Kalvanae Aanjanaeyaa Uyirgalaik Kaappai Hanumanthaa

  Urudhipporulae Aanjanaeyaai Urudhich Sollae Hanumanthaa 

  Ichchaiyellaam Un Maelae Aanjanaeyaa Iniyoru Piravi Vaendaam Hanumanthaa

  Viradhangal Thunaiyae Aanjanaeyaa Vinaigal Theeippaai Hanumanthaa

  Vinnae Mannae Aanjanaeyaa Kannin Maniyae Hanumanthaa

  Thiruvarut chelvanae Aanjanaeyaa Thiruvarul Privaaye Hanumanthaa 

  Arpudha Thaenae Aanjanaeyaa Aanandhath Thaenae Hanumanthaa

  Kholgalin Khohlaattamae Aanjanaeyaa Khohlgalin Vinai Theerppaai Hanumanthaa

  Kangalai Moodi Kaangindraen Aanjanaeyaa Agakkan Thirakka Arulvaayae Hanumanthaa

  Thaediyae Unnai Naadi Vandhohm Aanjanaeyaa Ohdiyae Vandhu Arulvaayae Hanumanthaa

  Konjiyae Nee Varuvaai Aanjanaeyaa Kumbida Arul Tharuvaai Hanumanthaa

  Adiyaarkkadiyaanae Aanjanaeyaa Adiyinai Yendrum Yaeththi Thozhuvhohm Hanumanthaa.

  Author©:- Gowthaman.V @ www.trinethram-divine.com 

  1

  View comments

 7. ஷீரடி சாயி பாபா, ஷீர்டி சாய்பாபா ஸ்துதி - மாலை ஆரத்தி பாடல்.

  ===

  சீரடியே பண்டரிபுரம் சாமியே எங்கள் விட்டல் 

  சந்திரபாகா நதியினைப்போல சீரடித்தலமே பக்திப் பிரவாகம் 

  நம்பினோரைக் காக்கும் தெய்வம் பண்டரிநாதா சாயி நாதா 

  வாருங்கள் வாருங்கள் வாருங்கள் எல்லோரும் 

  கலியுக தெய்வத்தைக் கண்ணாலே பாருங்கள் 

  எங்களைக் காப்பாற்ற ஓடிவாரும் தாயே சாயிபாபா 

  என்று தாஸ்கணு சொல்லி வணங்குகிறார்.

  ===

  Sheeradi Saayi Baabaa, Sheerdi Sai Sthuthi-Song-Paadal.

  ===

  Seeradiyae Pandaripuram Saamiyae Yengal Vittal

  Chandhrabaagaa Nadhiyinaipphohla Seeradiththalamae Bhakthip Pravaagam

  Nambinohraik Kaakkum Dheivam Pandarinaadhaa Saayi Naadhaa

  Vaarungal Vaarungal Vaarungal Yellohrum

  Kaliyuga Dheivaththaik Kannaalae Paarungal

  Yengalaik Kaappaattra Ohdivarum Thaayae Saayibaabaa

  Yendru Dhaaskanu Solli Vanangugiraar. 

  1

  View comments

 8. சபரிமலை அய்யப்பசாமி, மணிகண்டன், சாஸ்தா, வில்லாளிவீரன் பாடல் - ஸ்துதி.

  ===      

  மலையாளம் தனில் வாழும் தேவா 

  மனதினில் குடி கொள்வாய் முருகனுக்கிளையோனே. (மலை).

  அளவில்லா மலைமீது அமர்ந்தவனே தேவா 

  அழுதே நான் உனைக்காண அழுதா தனில் வந்து 

  என்குல தெய்வமானாய் அம்பலத்தரசே நீ 

  அருள் புரிவாய் என் நிலை கண்டு தேவா. (மலை).

  அமரேசா உனைக்காண அலைந்திடும் எனைப்பாராய் 

  பலநாளும் நான் செய்த பாவங்கள் தீராயோ 

  முன்முடி உனக்காக பின்முடி எனக்காக 

  தலைதனில் சுமந்து உனைக் காண்பேன் தேவா. (மலை).

  ===

  Sabarimalai Ayyappasaami, Manigandan, Saasthaa, Villaaliveeran Paadal-Song-Sthuthi.

  ===

  Malaiyaalam Dhanil Vaazhum Dhaevaa

  Manadhinil Kudikolvaai Muruganukkilaiyohnae. (Ma). 

  Alavillaa Malaimeedhu Amandhdhavanae Dhaevaa

  Azhudhae Naan UnaikkKaana Azhudhaa Dhanil Vandhu 

  Yen Kuladheivamaanaai Ambalaththarase Nee

  Arul Purivaai Yen Nilai Kandu Dhaevaa. (Ma).

  Amaraesaa Unaikkaana Alaindhdhidum Yenaippaaraai

  Palanaalum Naan Seidha Paavangal Theeraayoh

  Munmudi Unakkaaga Pinmudi Yenakkaaka

  Thalaidhanil Sumandhdhu Unaik Kaanbaen Dhaevaa. (Ma).

  1

  View comments

 9. வெற்றிவேலன், வேல்முருகன், குகன், கந்தன், சுப்ரமணியன், சாமிநாதன் பாடல் - ஸ்துதி.

  ===

  முருகா முருகா வேல்முருகா - முருகா முருகா வேல்முருகா 

  தங்கரதம் ஒன்று இங்கு அசைந்துவரச் 

  செந்தில்வளர் கந்தனுமே கொலுவிருக்க 

  நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன் 

  நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன். (மு).

  தேவரெல்லாம் கூடிநின்று வடம்பிடிக்கத் 

  தென்பழநி வலம் வரும் தங்கரதமாம் 

  தங்கரத மீதமர்ந்து கொலுவிருக்கும் 

  தண்டபாணித் தெய்வமே சரணமய்யா . (மு).

  பன்னீரும் சந்தனமும் பாற்குடமாம் 

  பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம் 

  கொஞ்சு தமிழ்ப் பாலனுக்கு பழனியிலே 

  கோடிக் கண்கள் வேணுமய்யா காண்பதற்கே. (மு).

  காவடிகள் உன்னைத் தேடி ஆடிவரும் 

  கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடிவரும் 

  சேவடியே சரணமென வாழ்பவர்க்கே 

  செல்வநலம் தந்தருளும் கந்தவேளே. (மு).

  கொக்கரக்கோ சேவல் ஒன்று கூவிவர 

  கோலமயில் நின்றுநட மாடிவர 

  சுப்பையா நானடிமை பாடிவர 

  சொக்கன் மகன்நீ அதனை கேட்டுவர. (மு).

  === 

  Sri Velmurugan, Vetrivelan, Guhan, Kandhan, Subramaniyan, Saaminaadhan Paadal-Song-Sthuthi.

  ===

  Murugaa Murugaa Vaelmurugaa - Murugaa Murugaa Vaelmurugaa

  Thangaradham Ondru Ingu Asaindhdhuvarach

  Sendhilvalar Kandhanumae Goluvirukka

  Nangai Malar Dheivaanai Valliyudan

  Naan Vanangum Thirukkohlam Kaanungalaen. (Mu).

  Dhaevarellaam Koodinindru Vadampidikkath

  Thenpazhani Valam Varum Thangaradhamaam

  Thangaradha Meedhamarndhdhu Goluvirukkum

  Dhandabaanith Dheivamae Saranamaiyaa. (Mu).

  Panneerum Sandhanamum Paarkudamaam

  Panjaamirdham Vibhoothi Abhishaekam

  Konju Thamizhp Baalanukku Pazhaniyilae

  Kohdik Kangal Vaenumaiyaa Kaanbadharkae. (Mu).

  Kaavadigal Unnaith Thaedi Aadivarum

  Kaalnadaiyaai Bhakthar Koottam Kohdivarum

  Saevadiyae Saranamena Vaazhbavarkkae

  Selvanalam Thandhdharulum Kandhavaelae. (Mu).

  Kokkarakkoh Saeval Ondru Koovivara

  Kohlamayil Nindrunada Maadivara

  Subbaiyaa Naanadimai Paadivara

  Chokkan Magannee Adhanai Kaettuvara. (Mu).

  1

  View comments

 10. Om Siva Om Siva Paraathpara Siva Thuthi, ஓம் சிவ ஓம் சிவ பராத்பர சிவ பக்தி துதி

  அருள்மிகு சிவபெருமான், ஈஸ்வரன் ஸ்துதி. 

  ===  

  ஓம் சிவ ஓம்... ஓம் சிவ ஓம் ... ஓம் சிவ ஓம் சிவ... ஓங்கார  சிவ ஓம் x 2.

  ஓம்கார சிவ ஓம் ... தவ சரணம்

  நமாமி சங்கர, பஜாமி சங்கர ... உமா மஹேஸ்வர தவ சரணம்

  கங்காதரனே தவசரணம் - காளகண்டனே சிவ சரணம் 

  சட்டைநாதனே தவ சரணம் - சடாமகுடனே சிவ சரணம் 

  சங்கர சங்கர, சம்போ சங்கர... சாம்ப சதா சிவ தவ சரணம். (ஓம் சிவ ஓம்).

  === 

  Lord Sivan, Eeswaran Sthuthi - Paadal.  

  ===    

  Om Siva Om ... Om Siva Om .. Om Siva Om Siva ... Ohngkaara Siva Om. x 2. 

   Omkaara Siva Om ...Thava Saranam 

  Namaami Sankara, Bhajaami Sankara ... Umaa Mahaeswara Thavasaranam

  Gangaadharanae Thava Saranam - Kaalakandanae Siva Saranam

  Sattainaadhanae Thava Saranam - Jadaamagudanae Siva Saranam   

  Sankara Sankara, Samboh Sankara ... Saamba Sadhaa  Siva Thava Saranam. (Om Siva Om).

  Author©:- Gowthaman.V@ www.trinethram-divine.com 

  1

  View comments

Loading