கணேசன் விநாயகர் பிள்ளையார்  பக்தி பஜனைப்பாடல், பெத்தாட்சி பிள்ளையார் தேனி அலங்காரம், Valampuri Vinayagar theni alankaaram, ganeshan pillayar vinayagar devotional song
அருள்மிகு பிள்ளையார்,
விநாயகர் பக்திப் பாடல்,
ஸ்ரீ கணேசன், மூஷிகவாஹணன்,
கஜானனன், ஸ்ரீ கணபதி,விநாயகன்,
விக்னேஸ்வரன் பஜனை பாட்டு.
English-Tamil-தமிழ், Lyrics,வரிகள்.


சுழி  போட்டு  செயல் எதுவும் தொடங்கு - பிள்ளையார் 
சுழி  போட்டு  செயல் எதுவும் தொடங்கு. (பி). 

அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து 
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து.(பி).

அழியாத பெருஞ்செல்வம் அவனே 
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே  
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே. (பி).

வழியின்றி வேலவன் திகைத்தான் 
குற வள்ளி அவள் கைபிடிக்க துடித்தான் 
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான் 
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் 
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்.(பி).

கேட்டதெல்லாம்  கொடுக்க வரும் பிள்ளை 
அதன் கீர்த்திகளை சொல்ல வார்த்தைகளே இல்லை 
ஆட்டமென்ன பாட்டமென்ன அனைத்தும் 
அவன் அருளின்றி எவ்வாறு நடக்கும். (பி).

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் 
வரும் துயர் யாவும் முன்னின்று தடுக்கும் 
அஞ்சேல் என்று ஒரு பாதம் எடுக்கும் 
அவன் அசைந்துவர அருள்மணிகள் ஒலிக்கும். (பி). 


ARULMIGU PILLAYAAR, 
VINAAYAGAR BAKTHI PAADAL, 
LORD GANESHA, MOOSHIKAVAAHANAN,
GAJAANANAN, GANAPATHI, 
VIGNESWARAN,GANESAN 
DEVOTIONAL BHAJANAI SONG.

Suzhi Phohttu Seyal Yedhuvum Thodangu-Pillayaar
Suzhi Phohttu Seyal Yedhuvum Thodangu. (Pi).

Adhan Thunaiyaalay Sugam Koodum Thodarndhu
Adhan Thunaiyaalay Sugam Koodum Thodarndhu. (Pi).

Azhiyaadha Perunjselvam Avanay
Thillai Aanandha Kooththanin Maganay
Thillai Aanandha Kooththanin Maganay. (Pi).

Vazhiyindri Veylavan Thigaiththaan
Kura Valli Aval Kaipidikka Thudiththaan
Marandhu Vitta Annanaiyeh Ninaiththaan
Maru Ganaththinilay Magizhchchiyilay Thilaiththaan
Maru Ganaththinilay Magizhchchiyilay Thilaiththaan.(Pi).

Kayttadhellaam Kodukka Varum Pillai 
Adhan Keerththigalai Solla Vaarththaigalay Illai 
Aattamenna Paattamenna Anaiththum
Avan Arulindri Yevvaaru Nadakkum. (Pi).

Thumbikkai Nambikkai Kodukkum
Varum Thuyar Yaavum Munnindru Thadukkum
Anjjayl Yendru Oru Paadham Yedukkum
Avan Asaindhuvara Arulmanigal Olikkum. (Pi).

View comments

ab02a274a7da868f4ff4f2867d40ed52
    Loading